விலங்கு மூலமே வைரஸ் பரவியது ஆய்வுகூடக் கசிவு வாய்ப்பு அரிது ஐ. நா. விசாரணைக் குழு அறிக்கை.

கொரோனா வைரஸின் மூலம் எது என்பது தொடர்பான ஐ. நா. சுகாதார நிறுவன விசாரணை அறிக்கை, மறுப்பு ஏதும் தெரிவிக்காத தரப்பான விலங்குகள் மீது மீண்டும் பழிபோட்டிருக்கிறது.

இடைநிலை விலங்கு ஒன்றின் மூலமே வைரஸ் மனிதருக்குத் தொற்றியிருக்க வேண்டும். ஆய்வு கூடத்தில் இருந்து அது கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது-என்று உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர்கள் குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளவாலில் இருந்து அடையாளம் தெரியாத இடைநிலை விலங்கு ஒன்றின் மூலமே வைரஸ் மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்று ஆரம்பம் முதல் அறிவியலாளர்கள் தெரிவித்து வந்த கருதுகோளையே தற்போது உலக சுகாதார நிறுவனமும் தனது முடிவாக அறிவித்துள்ளது.

எனினும் பண்ணை விலங்குகள், குளிரூட்டப்பட்ட இறைச்சி(frozen meat) என்பனவும் தொற்றுக்கான காரணங்க ளாக இருக்கக் கூடும் என்ற கருதுகோள் களை நிராகரிக்க முடியாது எனத் தெரிவி த்திருக்கின்ற உலக சுகாதார நிறுவனம், கிழக்கு ஆசியாவுக்கு வெளியே உள்ள விலங்கு உணவுகள் தொடர்பான அவதா னதையும் புறந்தள்ளிவிட முடியாது எனக் கூறி உள்ளது. இவை தொடர்பாகப் பூகோள ரீதியான பரந்துபட்ட ஆய்வுகள் அவசியம் என்றும் பரிந்துரை செய்துள் ளது.

கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் மனிதர்களுக்குப் பரவியது என்பதைக் கண்டறியும் விசாரணைகளில் சீனா வோடு இணைந்து ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவன(WHO) நிபுணர்கள் குழுவின் அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட இழுபறிகள், அரசியல் அழுத்தங்கள் பற்றிய செய்திகளுக்குப் பின்னரே இந்த இறுதி அறிக்கை வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரில் அமைந்துள்ள வைரஸ் பரிசோதனைக் கூடத்தில் இருந்தே கசிந்து மனிதருக்குத் தொற்றியது என்றும் அதற்குத் தங்களிடம் ஆதாரங்கள் உள்ளன என்றும் அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்களை அமெரிக்கா உலக சுகாதார நிபுணர்களிடம் வழங்கவில்லை.

உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு அதன் விசாரணைகளை சுயாதீனமாகச் செய்வதற்கு சீனா இடமளிக்கவில்லை.
பல ஆதாரங்களை அது காட்டாமல் மறைத்து விட்டது என்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் செய்திகளாக வெளியாகி இருந்தன.



குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *