“பாவப்பட்டவனுக்கு” ஒரு ஊட்டி, நெல்லையம்பதி. ஒரே நாளில் அனுபவித்து மகிழலாம்!
காலையிலெழுந்தவுடன் திட்டமிட்டுவிட்டுப் புறப்பட்டால் ஒரே நாளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு வர உகந்த ஒரு மலைப்பிரதேசம் நெல்லையம்பதி எனலாம்.
தமிழ்நாடு கேரள எல்லைக்கருகே கேரளப் பகுதியிலிருக்கும் நெல்லையம்பதியை உரிமையுடன் செல்லமாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கிறார்கள்.
குடும்பத்துடன், நண்பருடன் அல்லது ஜோடியாகப் போனாலும் மறக்கமுடியாத அனுபவங்களைப் பெற்று வரலாம் என்பது நிச்சயம்.
காணொளியை அழுத்திப் பாருங்கோ
முன்னொரு காலத்தில் பிரிட்டிஷ் மகாராணியையே ருசியால் மயக்கிய ஆரஞ்சுப்பழங்கள் இங்கிருந்து பெட்டியில் அனுப்பப்பட்டனநடுங்கவைக்கும் வளைந்து வளைந்து செல்லும் பாதையில் தேயிலை, கோப்பை, ஏலக்காய்த் தோட்டங்களினூடாகப் பயணித்து 4,600 அடி உயரம் வரை சென்று அங்கிருக்கும் மான்பாறையில் நிற்கும்போது கண்கள் பறவைக்கண்களாக மாறியிருக்கும்.காலுக்குக் கீழே அழகிய முகில்களினுடாக பாலக்காடு, மழம்புழா, பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் நகரங்கள் தெரியும்!
அழகிய நெல்லையம்பதிக்கு கேரளாவுக்கு போனால் போகாமல் மட்டும் வந்துவிடக்கூடாது.