பல சர்வதேச ஊடகங்களின் இணையத்தளங்கள் இன்று காலை செயலிழந்திருக்கின்றன.
நியூயோர்க் டைம்ஸ், கார்டியன், புளும்பெர்க், ல மொண்டே, டென்மார்க் தொலைக்காட்சி,ஸ்போர்ட்டிவை போன்ற பல சர்வதேச ஊடகங்களின் இணையத்தளங்கள் இன்று செவ்வாயன்று காலை முதல் திறக்க முடியாத நிலையிலிருக்கின்றன. அவை தவிர வெவ்வேறு நாடுகளிலும் உள் நாட்டு ஊடகங்களின் இணையத்தளங்களும், பிரிட்டிஷ் அரசின் உத்தியோகபூர்வமான பக்கங்களும் இயங்காதிருக்கின்றன.
நாளின் நடுப்பகுதியை ஒட்டிச் சில ஊடகங்களின் பக்கங்கள் மெதுவாக உயிர்பெற ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், அவை இன்னும் வழக்கம்போலச் செயற்பட ஆரம்பிக்கைவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குக் காரணம் இந்த ஊடகங்கள் தமது நாட்டுக்கு வெளியே தமது கோப்புக்களை வைத்திருக்கும் அவர்களுடைய முகில் சேவைகளைக் கையாளும் நிறுவனத்தின் தொழில்நுட்பச் செயற்பாட்டில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களே என்று குறிப்பிடப்படுகிறது. அவ்விபரத்தை அந்த நிறுவனங்களே குறிப்பிட்டு முடிந்தளவு விரைவில் இயக்கத்துக்கு வரச் ஒழுங்குசெய்வதாக உறுதிகூறுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்