“பிரதமர் பிள்ளைகள் மீது கவனமாயிருக்கிறார்” திட்டத்துக்கு மாநிலங்கள் விபரங்கள் கொடுக்கவேண்டுமென்கிறது உயர் நீதிமன்றம்.
மோடி அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது PM-CARES for Children திட்டம். கொவிட் 19 ஆல் பெற்றோரையிழந்த பிள்ளைகளின் சகல செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியுடன் உருவாக்கப்பட்டது அத்திட்டம். அந்தத் திட்டத்துக்கான ஒழுங்குகளைச் செய்வதற்கு அனாதையாகிவிட்ட பிள்ளைகள் பற்றிய விபரங்களை மத்திய அரசுக்குக் கொடுப்பதில் சில மாநில அரசுகள் இழுத்தடிப்புச் செய்வதாக மத்திய அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மார்ச் 2020 க்குப் பின்னர் அனாதையாகிவிட்ட அப்பிள்ளைகளின் விபரங்களைத் திரட்டி மத்திய அரசுக்கும் உடனடியாகக் கிடைக்கக்கூடிய பொதுக் கோப்புகளில் பதிவதில் ஈடுபட டெல்லி, மேற்கு வங்காளம் ஆகியவை தயக்கம் காட்டிவருவதாக அரச வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவ்விரண்டு மாநிலங்களுக்கும் அதுபற்றி நீதிமன்றம் எழுதிக் கோரியிருக்கிறது. அதே போன்ற ஒரு கோரிக்கை தமிழ்நாட்டுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்