கோபம் ஐனநாயகத்தின் வெளிப்பாடு, ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்!தாக்கப்பட்ட பின்னர் மக்ரோன் கருத்து.

கோபம் ஜனநாயக ரீதியான வெளிப்பாடு தான். ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்கள். ஆத்திரத்தையும் முட்டாள் தனங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்
கொள்ளாதீர்கள்.

அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு நாட்டு மக்களிடம் கேட்டிருக்கிறார்.

https://vetrinadai.com/news/face-slapped-macron-fr/

மக்ரோன் நேற்று சிறிய நகரம் ஒன்றில் சுற்றுப்பயணத்தின்போது இளைஞர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கானார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதையிட்டும்அச்சமடையவில்லை என்றும் மக்களை நோக்கிய தனது பயணங்களைத் தொடரப் போவதாகவும் தெரிவித்தார்.”பிரெஞ்சு மக்கள் எப்போதுமே உறுதியானவர்கள். எல்லாவற்றையும்விட நற்பண்பும் தொண்டு உள்ளமும்கொண்டவர்கள். எதையும் கேட்பதற்குமுன்னர் ஆத்திரத்துடன் முட்டாள்தனங்க களைக்கலந்து விடாதீர்கள்.” “மக்கள் என் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். அச்சமடைகிறார்கள். சில நேரங்களில் நான் செவிமடுக்கிறேன். இன்னும் சில வேளைகளில் என்னிடம் பதில்கள் இல்லை. சிலநேரங்களில் தவறாய் இருக்கிறேன். ஆனால் முட்டாள்தனத்துக்கும் வன்முறைக்கும் ஜனநாயகத்தில் இடமில்லை.”-இவ்வாறு மக்ரோன்குறிப்பிட்டார்.

இளைஞனின் வீட்டில்தேடுதல்.

மக்ரோனின் முகத்தில் தாக்கிய இளைஞர் ஒரு தற்காப்புக் கலை வீரர் என்று கூறப்படுகிறது. இரண்டு தற்காப்புக் கலைப் பயிலகங்களை (European martial arts) நிறுவியுள்ளார். இதற்கு முன்னர் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலீஸாரினால் அறியப்படாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.28 வயதான அவருடைய இல்லத்தில் பொலீஸார் சோதனைகளை நடத்தி உள்ளனர். அவருடன் கூட்டத்தில்காணப்பட்ட மற்றோர் இளைஞரும்கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இருவரதும் நோக்கம் என்ன என்பது தெரியவரவில்லை.

தீவிர எண்ணங்கள் இல்லாத அந்த இளைஞனின் செயல் தனக்கு ஆச்சரியமளிப்பதாக அவரது நண்பர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.

“அவர் வன்முறை மனப்பான்மைகொண்டவர் அல்லர். ஜனாதிபதியைதாக்கும் அளவுக்கு திடம் கொண்டவரும்அல்ல. அமைதியான சுபாவம் உள்ளவர்”என்று நண்பர் கூறியுள்ளார்.

பிரான்ஸின் சட்டங்களின்படி அரசுத் தலைவரை அவமரியாதை செய்கின்றஇத்தகைய குற்றச் செயல்களுக்குக் குறைந்தது மூன்றாண்டுகள் சிறையும் 45ஆயிரம் ஈரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம். இளைஞனது சுலோகத்தின்அர்த்தம் என்ன?

முகத்தில் அறைந்த போது “மக்ரோனிஸம் வீழ்க” என்ற அர்த்தத்தில் “Montjoie Saint-Denis ! À bas la macronie” என்று அந்தஇளைஞர் குரல் எழுப்பி உள்ளார். அதில்”Montjoie” என்பது முடியாட்சி வாசகம் என்று கூறப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டில் பிரான்ஸின் பேரரசுக் காலப்பகுதியில் போர் வீரர்களால் எழுப்பப்பட்டு வந்த “போர்க் குரல்” வாசகம் அது என்றும் அது தற்சமயம் தீவிர வலதுசாரிகளிடையே புழக்கத்தில்இருந்துவருவதாகவும் வரலாற்றியலுடன்தொடர்புடையோர் விளக்கமளித்துள்ளனர்.

மக்ரோன் மீது விழுந்த அறை நாட்டின் மீது வீழ்ந்த அடி என்ற கருத்துடன் இன்றைய பத்திரிகைகள் சில ஆசிரிய தலையங்கங்களை வெளியிட்டுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *