செயற்கையான களைகொல்லிகளை நிறுத்திவிடும் முதலாவது ஐரோப்பிய நாடாகவேண்டுமென்று சுவிஸ் மக்கள் வாக்களிப்பார்களா?

சுற்றுப்புற சூழலை மேம்படுத்திப் பூமியைச் சுத்தப்படுத்தும் ஒன்றுடனொன்றிணைந்த திட்டங்கள் இரண்டைப் பற்றி ஜூன் 13 ம் திகதியன்று சுவிஸ் மக்கள் தங்கள் கருத்தைச் சொல்ல வாக்குச் சாவடிக்குச் செல்லவிருக்கிறார்கள்.

அவர்கள் வாக்களிக்கப்போகும் முதலாவது கேள்வி ; செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைகளைகொல்லிகளைப் பாவிப்பதை நிறுத்தவேண்டுமா?

அத்துடன் இணைந்த இன்னொரு கேள்வி, தரமான குடி நீரையும், உணவையும் மக்களுக்குக் கொடுப்பதைப் பற்றியதும் ஆகும். செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைகளைகொல்லிகளைத்  தமது விவசாயம், பண்ணைகளில் பாவிப்பவர்களுக்கு, இறைச்சி மிருகங்களுக்கு அண்டிபயோட்டிக்காவைக் கொடுப்பவர்களுக்கு அரசு மான்யம் கொடுப்பதைத் தொடரவேண்டுமா?  

செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள், களைகொல்லிகள் தாவரங்களின் பன்முகத்தன்மையைக் குறைத்து வருகின்றன. அதன்மூலம் சுற்றுப்புற சூழல் பாதிப்புக்கள் உண்டாகின்றன. மேலும், அவை நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர் ஆகியவற்றுடன் சேர்ந்து எமக்கு வெவ்வேறு வியாதிகளைத் தோற்றுவிக்கின்றன என்கிறது ஆராய்ச்சிகள். 

நடக்கவிருக்கும் இவ்விரண்டு வாக்கெடுப்புகளுக்கும் பின்னாலிருக்கும் இயக்கங்கள் சுவிஸ் மக்கள் அவையிரண்டுக்கும் சாதகமான முடிவைத் தேர்ந்தெடுத்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். சுவிஸ் மக்கள் அப்படியான முடிவுகளை எடுப்பதன் மூலம் மற்றைய ஐரோப்பிய நாடுகளும் அதைத் தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள். கருத்துக் கணிப்பீடுகள் சுவிஸ் மக்கள் இக்கேள்விகளுக்கு ஆம், இல்லையென்று பதிலளிப்பதில் சரிக்குச் சரியான அளவில் பிளவுபட்டிருக்கிறார்கள் என்று காட்டுகின்றன.

தற்போதைய நிலையில் உலகில் பூட்டான் மட்டுமே செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைகளைகொல்லிகளைப் பாவிப்பதில்லையென்று முடிவெடுத்த ஒரே நாடாக இருக்கிறது.

வாக்களிக்கவிருக்கும் சுவிஸ் மக்கள் அந்த இரண்டு கேள்விகளுக்கும் “ஆம்” என்று பதிலளிக்கும் பட்சத்தில் சுற்றுப்புற சூழல் மேம்பாட்டில் மிகப் பெரும் மாற்றமொன்றுக்கு சுவிஸ் வழிவகுக்கும். நாட்டின் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் தங்கள் வழக்கங்களை மாற்றிக்கொள்ளப் பத்து வருடங்கள் அவகாசமளிக்கப்படும். 

விவசாயிகளின் சங்கத்தினர் பெரும்பாலானோர் சுவிஸ் மக்கள் ஆம் என்று பதிலளிப்பதன் மூலம் தமது விவசாயப் பாரம்பரியத்துக்கே முடிவுகட்டிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். சுவிஸில் தயாரிக்கப்படும் விவசாய, பண்ணைப் பொருட்களின் விலை அதிகரித்து வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி குறையுமென்று சிலர் குறிப்பிடுகிறார்கள். படிப்படியாக சுவிஸ் விவசாயத் தயாரிப்புக்கள், இறைச்சிப் பொருட்கள் அற்றுப் போய்விடுமென்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *