மற்றவர்களிடமிருந்து திருடி இணையத் தளங்களில் பதிபவர்களின் தவறுக்கு இணையத் தளங்கள் பொறுப்பல்ல- ஐரோப்பிய நீதிமன்றம்.

யூடியூப் போன்ற மற்றவர்களின் தயாரிப்புக்களை வெளியிடும் நிறுவனங்களில் பதியப்படும் விடயங்களுக்கு பதியப்படுபவர் தவிர்ந்த வேறொருவர் உரிமை கொண்டவராக இருப்பின் அது யாருடைய பொறுப்பு? அதாவது ஒரு நபர் இன்னொருவரின் பதிப்புரிமையை மதிக்காமல் அதையெடுத்துத் தான் யூடியூப் போன்ற இணையத் தளத்தில் வெளியிடுவாரானால் அதற்கு இணையத்தளம் பொறுப்பா?

நீண்ட காலமாகவே இக்கேள்வியைப் பதிப்புரிமைக் காப்பாளர்கள், படைப்பாளிகள் இணையத்தளங்களிடம் கேட்டு வருகிறார்கள். ஒரு படைப்பாளி தனது சொந்தப் படைப்புக்கான விலையைப் பெறுவதற்கு இணையத்தளங்கள் இடையூறாக இருக்கின்றன, அல்லது அவ்விடயத்தில் அலட்சியம் செய்கின்றன என்பதே குற்றச்சாட்டாக இருந்தது. 

இணையத் தளங்களைப் பொறுத்தவரை பதிப்புரிமையை மதியாது ஒருவர் எடுத்து அவர்களிடம் பிரசுரிப்பதையெல்லாம் உடனுக்குடன் அகற்றுவது இயலாத காரியம். வெளியிடப்பட்டவற்றை ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்னரே அதைச் செய்யமுடியும். அதனால், வேறொருவரின் தவறுக்கு அவர்கள் பொறுப்பெடுக்க முடியாது என்பதாகும்.

இவ்விடயம் ஐரோப்பிய நீதிமன்றத்தில் நீண்டகாலம் இழுபட்டது. கடையில் வந்திருக்கும் தீர்ப்பின்படி இணையத்தளங்கள் தம்மிடம் பதியப்படுபவற்றில் பதிப்புரிமை மீறப்பட்டது தெரிந்திருப்பின் உடனடியாக அவை அகற்றப்படவேண்டும் என்பதாகும். அதாவது சட்ட ரீதியாக யூடியூப் இன்னொருவர் அங்கே பதியப்படும் பதிப்புரிமை மீறப்பட்ட பதிவுக்குப் பொறுப்பாகாது என்பதாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *