அதிகுறைந்த வயதில் செஸ் விளையாட்டில் வெற்றிபெற்றவர் என்று சரித்திரத்தில் இடம்பெற்ற அபிமன்யு மிஷ்ரா.
பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு அன்று 12 வயதும் ஏழு மாதங்களும் வயதான செர்கெய் கர்யாக்கின் அவ்விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தைப் பெற்றார். உக்ரேனைச் சேர்ந்த கர்யாக்கினின் சாதனையை முறியடித்திருக்கிரார் 12 வயதான அமெரிக்கச் சிறுவன் அபிமன்யு மிஷ்ரா.
செஸ் விளையாட்டில் அதி வித்தகர்கர்களென்ற முடிசூடிக்கொள்பவர்களின் வயது பல வருடங்களாகவே குறைந்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த குகேஷ் டொம்மராஜு [12 வயது 7 மாதங்கள், 17 நாட்கள்], உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த ஜவோகிர் சிந்தாரோவ் [13 வயது], இந்தியாவைச் சேர்ந்த பிரகநந்தா ரொமேஷ்பாபு [12 வயது 10 மாதங்கள்] ஆகியவர்கள் அந்த முடியை அதி இளவயதில் சூடிக்கொண்ட வேறு சிலராகும்.
15 வயதான இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற லியோ லூக் மெண்டொன்கா என்பவருடன் விளையாடியே அபிம்ன்யு மிஷ்ரா அப்பட்டத்தை வென்றிருக்கிறார். புதனன்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெற்றிபெற்ற அபிமன்யு மிஷ்ராவின் வயது 12 வருடங்கள், நாலு மாதங்கள் 25 நாட்களாகும்.
பல மாதங்களாக ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் தங்கியிருந்து மீண்டும், மீண்டும் வெவ்வேறு செஸ் போட்டிகளில், வெவ்வேறு திறமையானவர்களுடன் மோதியே அபிமன்யு மிஷ்ரா தனது பட்டத்தை வென்றிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்