இத்தாலியின் முன்னாள் மேற்றிராணியார் உட்பட ஒன்பது பேரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வத்திக்கான் கேட்டுக்கொள்கிறது.
வத்திக்கான் பொருளாதாரத்தைக் கையாளும் உயர்மட்டத் தலைவரிருவர், மேற்றிராணியார் ஆஞ்சலோ பெச்சியூ உடபட மேலும் சிலரைப் பொருளாதார மோசடிக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க பாப்பரசர் பிரான்சீஸ் முடிவுசெய்திருக்கிறார். ஆஞ்சலோ பெச்சீயூ ஏற்கனவே பாப்பரசரால் பதவியிலிருந்து விலக்கப்பட்டவராகும்.
கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி வத்திக்கான் பொருளாதாரத்தைக் கையாள்வதில் மோசடிகள் செய்த அக்கும்பலை வத்திக்கான் தனது விசாரணைகளின் மூலம் ஏற்கனவே ஆராய்ந்திருக்கிறது. இரண்டு வருடங்களாக நடந்த அந்த ஆராய்ச்சிகளிலிருந்து வத்திக்கான் பணத்தில் லண்டனின் விலையுயர்ந்த பகுதியில் கட்டடங்கள் வாங்கப்பட்டது உட்பட பல மோசடிகள், கையாடல்கள் பற்றித் தெரியவந்திருக்கிறது என்கிறது வத்திக்கான்.
ஸ்லோவேனியா, அமெரிக்கா, சுவிஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களும் அந்தப் பொருளாதார மோசடிகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்