மிதக்கும் மிகப்பெரிய சூரியக்கல பண்ணை சிங்கப்பூரில்
முற்றிலும் சூரிய ஒளிச்சக்தியில் இயங்கி அதை மின்சார சக்தியாக மாற்றும் பெரிய மிதக்கும் சூரியக்கலப்பண்ணையை சிங்கப்பூர் உருவாக்கியிருக்கிறது.
இதன் சிறப்பம்சம்,
உலகின் மிகப்பெரிய சூரியக்கல பண்ணைகளில் ஒன்று என்பதும், நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரியக் கலங்களின் பண்ணை என்பதும் ஆகும்.
(world’s biggest floating solar panel farms)
இது சிங்கப்பூரின் மேற்குக்கரையில் அமைந்துள்ள தெங்கே நீர் ஏரியில் ,
ஒரு லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் சூரியக்கலங்கள் மிதக்கவிடப்பட்டு ,
மின்சாரம் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
45 ஹெக்டேயர்(111.2 ஏக்கர்) பரப்பளவில் – அமைக்கப்பட்டுள்ளது.
இது 45 உதைபந்தாட்ட மைதானங்களைக்கு சமமானது ஆகும் .
சிங்கப்பூரில் , இதுபோன்ற
இன்னும் 4 மேலதிகமான சூரியக்கலப் பண்ணைகள் உருவாகிக்கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.