வெற்றி,தோல்வி சாதனை,உணர்வு, ஏமாற்றம்,விட்டுக்கொடுப்பு அனைத்துக்கும் களம் தந்து நாளை விடைபெறவிருக்கும் ரோக்கியோ ஒலிம்பிக் 2020
இரண்டு வாரகால கொண்டாட்டம், உணர்வுகளின் பரிமாற்றம், வியக்கத்தக்க விட்டுக்கொடுப்பு, பதிவுசெய்யப்பட்ட புதிய சாதனைகள் என்று பலப்பல விடயங்களை தனதாக்கி ரோக்கியோ ஒலிம்பிக் 2020 நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வருகிறது.
12 கால மாத தாமதம்,உலக நாடுகள் எங்கும் இருக்கும் சவால்கள் அனைத்தையும் விஞ்சி பல கதைக்களங்களை , புதிய பல நாயக நாயகிளை உருவாக்கி விடைபெறவிருக்கிறது ரோக்கியோ ஒலிம்பிக் 2020.
நிறைவுக்கொண்டாட்டம் மிகப்பிரமாண்டமாக விழா ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெறும். இதே நாளில் இன்னும் பல விளையாட்டு நிறைவுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, கொண்டாட்ட நிறைவு நிகழ்வு ரோக்கியோ நேரப்படி இரவு 8 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது.
நிறைவு விழாவின் பின்னர் ஒலிம்பிக்கில் பங்குபற்ற வந்த வீரர்களும் அவர்களின் குழுக்களும் தங்கள் விளையாட்டுகளை முடித்த 48 மணி நேரத்திற்குள் ரோக்கியோவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. ரோக்கியோ வாழ் உள்ளூர் மக்களிடையே தொற்று மற்றும் வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க, விருந்தினர்களாக வந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நிறைவுவிழா கொண்டாட்டத்திற்கும் நேரடியாக விழாவை கண்டுகளிக்க குறைந்த எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஒலிம்பிக் எங்கே நடக்கும்?
இதேவேளை 2024 ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 26 2024 முதல் முதல் ஓகஸ்ட் 11, 2024 வரை அது நடைபெற உள்ள செய்தியும் நாளையன்று ரோக்கியோ பிரமாண்ட நிறைவு நிகழ்வில் அறிவிப்பாகும்.
நிறைவு விழா எங்கே நடக்கிறது?
ஆரம்ப நிகழ்வின் பிரமாண்டத்தை போலவே நிறைவுக்கொண்டாட்டமும் ரோக்கியோ ஒலிம்பிக் ஸ்ரேடியயத்தில் நடைபெற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன
ஊடகங்கள் மூலமாகவே பல்வேறு மக்களையும் சென்றடையவிருக்கும் இந்த நிறைவு நிகழ்வை நோக்கி உலகின் பல முன்னணி ஊடங்களும் நேரடியாக ரோக்கியோ ஒலிம்பிக் ஸ்ரேடியத்தில் தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.