தெற்கு ஐரோப்பாவைப் பற்றிப் பிடித்திருக்கும் வெப்ப அலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெய்ன் நாட்டின் அந்தலூசியா பிராந்தியம் 46 செல்சியஸை அனுபவித்து வருகிறது. கொர்டோபா பிராந்தியத்தின் மொந்தோரோ நகரில் 2017 ஐப் போல மீண்டும் வெம்மை 46.9 செல்சியஸாக இருக்கிறது.
பரவலாக அந்த நாடுகளெங்கும் காணப்படும் இந்த வெப்ப அலை சஹாரா பிரதேசத்திலிருந்து ஐரோப்பாவை நோக்கி நகர்ந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலைமைக்குத் தயாராக இருக்கும்படி எச்சரித்த அரசின் வேண்டுகோளையேற்றுப் பெரும்பாலும் வீதிகள் மக்களைக் காணமுடியவில்லை.
இரவுகளிலும் வெப்பநிலை மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஸ்பெய்னின் தெற்குப் பகுதிகளில் அது சுமார் 25 செல்சியஸாக இருக்கிறது. வரவிருக்கும் வாரத்திலும் வெப்ப நிலை இதேபோலவே தொடரும் என்று குறிப்பிட்டிருக்கும் சர்வதேச வானிலை கண்காணிப்பு நிலையம் இது வழமைக்கு மாறான அதீத வெப்ப அலை என்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்