தென்னமெரிக்க நாடுகளில் அதிக தடவைகள் எதிரியின் வலைக்குள் பந்தைப் போட்டுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி.
வியாழனன்று புவனர்ஸ் அயர்ஸில் பொலீவியாவைக் கால்பந்தாட்டத்தில் எதிர்கொண்டது ஆர்ஜென்ரீனா. அந்த மோதலில் மூன்று தடவைகள் எதிரணியின் வலைக்குள் பந்தை அடித்த லயனல் மெஸ்ஸி தனது நாட்டின் அணிக்காக 79 தடவைகள் கோல் போட்டிருக்கிறார். அதன் மூலம் 34 வயதான மெஸ்ஸி பெலேயின் சாதனையான 77 ஐ முறியடித்து அதைத் தாண்டியும் விட்டார்.
சமீப வாரங்களுக்கு முதல் வரை பார்ஸலோனா அணிக்காக விளையாடி வந்த மெஸ்ஸி தனது விலாசத்தை Paris Saint-Germainl என்று மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது சமகாலப் போட்டியாளரான ரொனால்டோ சர்வதேசக் கால்பந்தப் போட்டிகளில் தனது நாட்டுக்காக 180 தடவைகள் விளையாடி 111 கோல்கள் போட்டு அவ்விடயத்தில் தொடர்ந்தும் உலகில் முதலிடத்தைப் பற்றியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்