ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவராக ராஜா ரந்தீர் சிங் பொறுப்பேற்கிறார்.
ஆசிய நாடுகளுக்கான ஒலிம்பிக்ஸ் அமைப்பின் [Olympic Council of Asia] தலைமைப் பொறுப்பை இந்தியாவைச் சேர்ந்த 74 வயதான ராஜா ரந்தீர் சிங் இன்று முதல் பொறுப்பேற்கிறார். அந்த அமைப்பில் நீண்ட காலமாக அங்கத்தவராக இருந்தவர் ராஜா ரந்தீர் சிங் ஆகும். வரவிருக்கும் 2022 குளிர்கால ஒலிம்பிக் ஸ் போட்டிகள் இன்னும் ஒரு வருடத்தில் சீனாவில் நடக்கவிருப்பது தெரிந்ததே.
ஷேக் அஹ்மத் அல் – பஹத் அல் – சபா என்ற குவெய்த் அரச் குடும்பத்து உறுப்பினரே அப்பதவியில் இதுவரை இருந்தவர். தான் குவெய்த் அரச குடும்பத்தினர் என்பதைப் பாவித்து அரச குடும்பத்தை வீழ்த்தத் திட்டம் தீட்டப்பட்டதாக ஒரு பொய்யைப் பரப்பி அதைத் தனக்குச் சாதகமாக்கும் நடவடிக்கைகளுக்காக சுவிஸ் நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டிருக்கிறார். அதனால், அவர் தனது ஒலிம்பிக்ஸ் பதவியிலிலிருந்து விலகவேண்டியதாயிற்று.
ராஜா ரந்தீர் சிங் ஒரு முன்னாள் விளையாட்டு வீரராகும். இவர் இந்தியாவுக்காகச் சர்வதேச பந்தயங்களில் துப்பாக்கி குறிபார்த்துச் சுடுதல் விளையாட்டில் பங்குபற்றியிருக்கிறார். 1979 இல் அர்ஜூனா விருது பெற்றுக் கௌரவப்படுத்தப்பட்டவர்.
சாள்ஸ் ஜெ. போமன்