சோற்றுக்குப் பதிலாக உருளைக்கிழங்கை அடிப்படை உணவாக்குவதன் மூலம் காலநிலையை மாற்றும் வாயுக்களின் அளவைக் குறைக்கலாம்.

சீனர்களின் சோறு சாப்பிடும் வழக்கத்தைக் கவனித்து அவர்களை அதற்குப் பதிலாக உருளைக்கிழங்கை அடிப்படை உணவாக உண்ணப் பழக்கினால் உலகின் காலநிலையை வெப்பமடையச் செய்துவரும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என்கிறது “Nature Food” என்ற ஆராய்ச்சிச் சஞ்சிகையில் வெளிவந்திருக்கும் கட்டுரை ஒன்று. காரணம் நெல் விளைவிப்பதால் வெளியேறும் வாயுக்கள் எமது சூழலை வெப்பமடையச் செய்வதில் தீவிரமாக இருக்கின்றன என்பதே.

நவீன விவசாய முறைகளைக் கைக்கொண்டு சீனா நெல் விளைச்சலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு விளைச்சலைக் கைக்கொள்ளுமானால் காலநிலையை வெப்பமாக்கும் வாயுக்களின் 25 % ஐக் குறைக்கலாம் என்கிறது அந்த ஆராய்ச்சி.அது மட்டுமன்றி தற்போது இருப்பதை விடக் குறைந்த அளவில் நீர் அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதுடன் பயிரிடத் தேவையான நிலத்தின் அளவும் கணிசமாகக் குறையும்.

சீனாவும் இதைக் கவனித்து 2015 இல் தனது நாட்டில் உருளைக்கிழங்கு விவசாயத்தை அதிகமாக்கும் நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு அதிக வரவேற்புக் கிடைக்கவில்லை. சீனர்கள் தமது உணவில் சோற்றின் பாகத்தை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *