காற்றிலே தொங்கிக்கொண்டிருக்கும் பாறைகளின் மீது கிரேக்க தேசக் கிறீஸ்தவ மடாலயங்கள்.
பரப்பளவில் கிரேக்கதேசத்தின் மிகப்பெரிய தொல்லியல் பிராந்தியம் மெத்தியோரா ஆகும். 1989 இல் யுனெஸ்கோவின் உலகக் கலாச்சாரப் பெட்டகங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும் மெத்தியோரா மடாலயங்கள் 1995 இல் கிரீஸ் நாட்டின் புனிதமான பிராந்தியம் என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது.
பெரும்பாலானோரும் பொதுவாகவே அழகான கடற்கரைகளை நாடிக் கிரேக்க தேசத்துக்குச் சுற்றுலா போவதுண்டு. அவைகளுக்குத் தூரமாக கிரீஸின் தெஸ்ஸலி பிராந்தியத்திலிருக்கின்றன சமதரையில் காளான்கள் போன்று முளைத்திருக்கும் மெத்தியோரா பாறைகள்.
ஒத்தமானிய சாம்ராஜ்யத்தின் கீழ் கிரேக்க தேசம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் அந்த நாட்டின் கலை, கலாச்சாரங்களைப் பாதுகாத்த இடங்கள் இவை என்று குறிப்பிடப்படுகிறது. கலம்பாக்கா நகரத்தின் அருகே இருக்கும் இந்த மடாலயங்களுக்கு ஏதென்ஸ் மற்றும் ஸெலனோக்கி நகரங்களிலிருந்தும் போக்குவரத்து வசதிகள் உண்டு.
சாள்ஸ் ஜெ. போமன்