மழையின் போது மின்னல் தாக்கி பத்து மாடுகள் உயிரிழந்த அவலம்.
பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் (orages) என அழைக்கப்படுகின்ற இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பெய்து வருகிறது.Dordogne என்ற தென்மேற்கு மாவட்டத்தில் கடும் மழையின் போது இடிமின்னல்தாக்கியதில் பத்து மாடுகள் உயிரிழந்தசம்பவம் அப்பகுதி பண்ணையாளர்களைஅதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடும் மழை பெய்த சமயம் ஓர்க் மரம் ஒன்றின் கீழ் தஞ்சமடைந்து நின்றிருந்தநான்கு மாடுகளும் ஆறு கன்றுகளுமே அந்த மரத்தை மின்னல் தாக்கியதால் உயிரிழக்க நேரிட்டுள்ளது. கடும் புயலி னால் அங்கு சுமார் 900 வீடுகளுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது. இடி மின்னலின் போது உயர்ந்த மரங்களின் கீழ் மறைவது ஆபத்தானது.மரத்தின் கீழ் நின்ற காரணத்தாலேயே மாடுகள் ஒட்டுமொத்தமாக உயிரிழக்க நேர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு பிரான்ஸின் Réunion தீவில் கொடும் மின்னல் தாக்குதலில் 24 மாடுகள் உயிரிழந்தன. மின்னலின் வீச்சினால் மாடுகள் சுமார் முப்பது அடிஉயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டிருந்தன. இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் கடந்த மே மாதம் இடம்பெற்ற மற்றொருமின்னல் தாக்குதலில் 18 யானைகள் கொல்லப்பட்டன.
சமீப காலமாக இடிமின்னல் தாக்குதல்களில் கால்நடைகள் இறக்கின்றன சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களே மின்னல் தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.