“வசதியற்றோரைப் பசியாற்ற எப்படி 6.6 பில்லியன் போதுமென்று விபரம் சொல்லுங்கள், நான் தருகிறேன்.” – எலொன் மஸ்க்
சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா-வின் உணவு உதவி அமைப்பான World Food Programme இன் நிர்வாகி டேவிட் பீஸ்லி உலகின் அதிபணக்காரர்களான ஜெப் பேஸோஸ், எலோன் மஸ்க் ஆகியோரிடம் “43 நாடுகளில் பசியில் வாடும் 42 மில்லியன் பேருக்கு உணவுக்கான உதவி செய்ய 6.6 பில்லியன் டொலர் தேவை, தந்துதவுங்கள்,” என்று இறைஞ்சியிருந்தார். அந்தத் தொகை உதவியாகக் கிடைக்காவிட்டால் அந்த 42 மில்லியன் பேர் இறக்கப்போவது உறுதி என்று அவர் தெரிவித்திருந்தார்.
டுவிட்டர் மூலம் ஒரு சவாலுடன் டேவிட் பீஸ்லிக்குப் பதிலளித்தார் எலோன் மஸ்க், “6 பில்லியன் டொலர் உலகின் பசி பட்டிணியைத் தீர்க்குமென்றால் எனது டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்று அதைத் தர நான் இப்போதே தயார். இந்த டுவீட்டுக்குப் பதிலாக நீங்கள் எப்படி அதைச் செய்வீர்கள் என்பதை. உங்கள் தெளிவான திட்டத்தை எல்லோரும் பார்க்கக்கூடியதாக இங்கே விபரியுங்கள்,” என்பது எலோன் மஸ்க்கின் சவால்.
ஐ.நா-வின் உணவு உதவி அமைப்பு எப்படித் 6.6 பில்லியனைச் செலவழிக்கிறது என்பது எப்போதும், உலகில் எல்லோருக்கும் காணக்கூடியதாக விபரமாகப் பதியப்படவேண்டும், என்பது கட்டாயம் என்கிறார் எலோன் மஸ்க்.
எலோன் மஸ்க்கின் சவாலுக்கு டுவிட்டர் பதிலளித்திருக்கிறார் டேவிட் பீஸ்லி.
“எலோன் மஸ்க் நீங்கள் என்னிடம் அந்த 42 மில்லியன் பேரை எப்படிக் காப்பாற்றுவது என்று கேட்டிருந்தீர்கள். இதோ பகிரங்கமாக உங்களுக்கு எனது திட்டத்தைத் தருகிறேன். இதற்காக நான் உங்களிடமும் எவருடனும் பேசத் தயார். வாருங்கள், 2022 இல் 42 மில்லியன் பேர் இறக்காமல் காப்பாற்றுவோம்.”
சாள்ஸ் ஜெ. போமன்