மயில்
மயிலே…
மனங்களிலே
அழகூட்டும் மயிலே
அகவும் மயிலே
முல்லை அரும்பு களெல்லாம்…
முகத்தில் சிரிக்க
என்
முற்றம் வந்து
சுற்றம் விசாரிக்க
வந்த மயிலே…
வணக்கம் மயிலே …!
உன்
விழியில் நீலம்.
எங்கள் விழிகளிலே
நிலா வளர்க்கிக்கிறாய்!
உடலின் நிறமோ
மரகத சிலையா…
மனதை பறிக்கிறாய் !
உன் ஒய்யார உச்சிகொண்டையில்
கண்களை பறித்திடும்
கந்தர்வ தேசத்தின்
கற்பக மலர்…!
அடியெடுக்கும் பாதமிரண்டிரலும்
நொச்சி இலைகளா!
பறக்கும்
பறவைகள்
காந்தாரம் பாடிடும்
கருநிற
வண்டினங்கள்…
ரீங்காரம் செய்யும்
தும்பிகள் மத்தியிலே
நீ மட்டும் தான்
உலக அழகு!
இளமணல் பரவிய
எழில் நில மேடையில்
நீதான் ஆடல் அழகி!
சோலைமலர் கூட்டத்தில்
உன் கழுத்தசைவுகள்
கலைமானின்
கலையழகு.
சிலை போல எங்கள் நெஞ்சில் உறைந்து
மலை போல உயர்ந்து
விட்டாய்…!
ஆட வைத்த ஆட்டனத்தியே…
நடன நங்கையர்
உன்னிடமா
நளினமாக நடனம்
கற்றனர்…!
முகிலை அழைக்க
முந்தானை வீசுகிறாய்
வட்ட தோகையை
வட்டமாக விரித்து வைத்து
வலை வீசுகிறாய்!
நீ அழகாய் இருப்பதால்
எங்கள் தங்கைகளுக்கு
அழகு மயில் யென
அடை மொழியில்
பெயர் சூட்டுகிறோம்!
செங்கதிரை
தின்னும் மயிலே…
கோடை நெருப்பு
உனக்கு வெறுப்பு.
அதனால்
தோகை விரிக்கின்றாய்
நீருண்ட முகிலுக்காக.!
கோவில் குளங்கள்
கொல்லைப்புரங்கள்
எல்லாம் அலைந்து திரியும்
குறிஞ்சியின்
குற வஞ்சியே…
எங்கள் தேசீய பறவையே…
எப்பொழுதும் நாங்கள்
இன்பமுடன் இருப்பதற்கு எங்கள் உள்ளங்களில்
ஆட்டம் ஆட அழைக்கிறோம்
அழகே… அழகு மயிலே
எழுதுவது ;மதுப்பிரியா.