புது வருடமே வருக!

புது வருடமே வருக!
புது வசந்தம் தருக!
புது வாழ்வைத் தருக !
புது கவிதைகளைத் தருக!
எங்களுக்கு சந்தோஷங்கள்
மகிழ்ச்சி
குதூகலத்தை அள்ளித் தருக!
ஆரோக்கியமான வாழ்வைத் தருக!

இந்நாள் முதல்
இயற்கையோடு இணைந்து இசையுடன் வாழ்வோம்!
இன்பங்கள் பல காண்போம்!

மரங்களை நடுவோம்
பசுமையான நினைவுகளில்
உலா வருவோம்!

நிலவின் ஒளியில் நனைவோம்!

நட்சத்திர கூட்டங்களுடன்
விளையாடுவோம்!

நேற்றைய நிகழ்வுகளை
மறந்து இந்த நொடியில்
இன்பமாக வாழ்வோம்!

புதுவருடத்தை

மகிழ்ச்சியுடன்
வரவேற்போம்!

எழுதுவது: விஜயலட்சுமி