அர்த்தமில்லை

உலக
சந்தோஷங்களை உதரி
ஓடிப்போன
அந்த ராஜகுமாரன்……

திடுமென கண்ணெதிரே கண்ட வயோதிகமும்,
நோயும், மரணமும்
சொல்லிய சேதி
புரிய …..
துறவு
தேவைப்பட்டது
சித்தத்தை ஆர்த்தவனுக்கு…

ஆசையே துன்பத்திற்கு
அடிப்படை
என்றொரு
புதிய சேதி
கண்டபின்
ஆயினான்
புத்தனென…..

அந்த புத்தனை
சிந்தைக்குள்
செலுத்தியபின்
பாரதியின்
வெந்து தணிந்து
கொண்டிருந்த
காட்டிலிருந்து
சிறு துண்டு
தணலை
புத்திக்குள்
போட்டுவைத்தது
போல
வெந்து
எரிகின்றபோது,

ஆலகால விஷம்
சிவனின் கண்டத்தில்
இருப்பது
சிறப்பு
என்றறியாது

ஒருதுளி
ஆலகாலத்தையும்
சுவைக்க
நேர்ந்தபோது,

புத்தன்
போல்,
ஆசையே
அத்தனைத்
துன்பத்திற்கும் அடிப்படை….

நீ புத்தனாகி விடு
என எச்சரிக்கும்
உள்ளுணர்விடம்

வாதப்போர்
புரியாமல் சரண்டைகிறேன்
நானும்
ஓர் புத்தன்
என்பது
நிஜமே…..

ஆனால்…..
தணியாமல் வெந்து
கொண்டிருக்கும்
சிந்தை
குளிர
இனி நூறு
பிறவி வரும் தானோ…..

எழுதுவது ; தர்ஷிணிமாயா