What’s app இல் வரவுள்ள புதிய அம்சம்|வியாபார சேவை நிறுவனங்களை ஒரே இடத்தில் பார்க்க வாய்ப்பு
உலகில் அதிகப்படியானோர் பயன்படுத்தும் WhatsApp App/செயலியில் குறித்த பாவனையாளர் நிற்குமிடத்தைச் சூழவுள்ள வாணிபத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அந்நிறுவனம் வழங்க தயாராகுவதாக தொழிநுட்பத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே குழுவாக மற்றும் தனியாக குரல் மற்றும் தகவல் தொடர்பாடல் களமாக பிரபல்யமான செயலியாக விளங்கும் what’sapp இந்த சேவையை வழங்குவதன் மூலம் வர்த்தக நடவடிக்கைகளையும் மூலைமுடுக்கெங்கும் தன்பக்கம் ஈர்க்கும் செயற்பாடுகளில் ஒன்றாக இதை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது.
ஏற்கனவே பிரேசில் நாட்டில் இந்த மேலதிக அம்சத்தை பரீட்ச்சித்து அதை உலகின் ஏனைய நாடுகளுக்கும் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.What’s app இன் Beta வகையை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கே இது வாய்ப்பு கிட்டும் எனவும் சொல்லப்படுகிறது.
அத்துடன் what’s appஇன் வர்த்தக கணக்கு வைத்திருப்போருக்கு மேலதிக வாய்ப்புகளும் இந்த புதிய அம்சம் அவர்களுக்கு அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவில் மக்களிடம் எடுத்துச்செல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே Google போன்ற இணைய வசதிகளின் ஊடாக அண்மித்த வியாபார சேவைத்தகவல்களை பெற்றுக்கொள்ளும் இருந்தபோதிலும், தொலைபேசியூடாக இணையும் WhatsApp ஊடாக இந்த புதிய அம்சம் வருவது பாவனையாளர்களுக்கு மிகவும் இலகுவாக்கும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப் செயலி இந்த செயலில் பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றங்களை செய்து வருகின்றனர்.
தற்போது தகவல் பரிமாற்றங்களுடன் இதில் வீடியோ கால் வசதி மற்றும் குரூப் சேட் வசதி பலரையும் கவர்ந்து வருகிறது. அந்தவகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி சில அப்டேட்க தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. அந்த அப்டேட்களில் அவர்கள் புதிதாக ஒரு வசதியை இணைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரேசில் நாட்டில் மட்டும் ஒரு புதிய வகை அப்டேட்டை அளித்துள்ளது. அதன்படி தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியின் மூலம் ஷாப்பிங் செய்ய ஏதுவாக இடங்களை தேடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களுடைய இடத்திலிருந்து அருகே உள்ள கடைகள், பலசரக்கு கடைகள் ஆகியவற்றை தேடும் வசதி இடம்பெற்றுள்ளது
இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப் செயலி இந்த செயலில் பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றங்களை செய்து வருகின்றனர்.
தற்போது தகவல் பரிமாற்றங்களுடன் இதில் வீடியோ கால் வசதி மற்றும் குரூப் சேட் வசதி பலரையும் கவர்ந்து வருகிறது. அந்தவகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி சில அப்டேட்களை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. அந்த அப்டேட்களில் அவர்கள் புதிதாக ஒரு வசதியை இணைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரேசில் நாட்டில் மட்டும் ஒரு புதிய வகை அப்டேட்டை அளித்துள்ளது. அதன்படி தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியின் மூலம் ஷாப்பிங் செய்ய ஏதுவாக இடங்களை தேடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களுடைய இடத்திலிருந்து அருகே உள்ள கடைகள், பலசரக்கு கடைகள் ஆகியவற்றை தேடும் வசதி இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் உள்ளிட்ட இரண்டு வகைகளுக்கும் பொருந்தும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் பிரேசிலில் மட்டும் வந்துள்ளது. விரைவில் இது உலகம் முழுவதும் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் அனைவருக்கும் படிப்படியாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது முதலில் வாட்ஸ் அப்பில் தொழில் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு முதலில் வரும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த அப்டேட் எப்போது மற்ற நாடுகளில் வரும் என்பது தொடர்பான தெளிவான தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ் அப் செயலியில் தொழில்முறை கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வேறு சில வசதிகளும் உடன் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் பீட்டா வெர்ஷன் பயன்படுத்துபவர்களுக்கு விரைவில் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது வரும் பட்சத்தில் வாட்ஸ் அப் செயலின் மூலமே நம் அருகில் இருக்கும் ஷாப்பிங் இடங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.