ஆப்கானிஸ்தான் பெண்கள் மீது தலிபான்கள் புதியதாகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

நாட்டில் பெண்களுக்கான கடுமையான சட்டங்கள் தளர்த்தப்பட்டு, சம உரிமைகள் அவர்களுக்கும் வழங்கப்படும் என்று நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியதும் பல தடவைகள் உறுதிகூடிய தலிபான்களின் தலைமை தொடர்ந்தும் அதற்கெதிரான வழியில் நடந்து வருகிறார்கள். புதியதாக, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் பெண்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துபவையாகும்.

பாரம்பரியங்கள், வழக்கங்களைப் பேணுவதற்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்ட அமைச்சின் மூலமாகப் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 72 கி.மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்குப் பயணம் செய்யும் பெண்கள் தமது நெருங்கிய உறவுள்ள ஆண் ஒருவருடன் பயணிக்காவிடின் அவர்களைப் போக்குவரத்து வாகனங்களில் ஏற்றிக்கொள்ளலாகாது. வீதிகளின் இஸ்லாமிய முக்காடு போடாத பெண்களை எவரும் வாகனங்களில் ஏற்றிக்கொள்ளலாகாது. 

பெண்களுக்கான உயர்கல்வி பற்றிய விடயத்தில் அவர்கள் அதைத் தொடரலாம் என்ற உறுதிகூறப்பட்டாலும் அவர்களை ஆண் மாணவர்களுடன் கல்விகற்க ஆப்கானிஸ்தான் விரும்பவில்லை என்று அதற்கான அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி தெரிவித்திருக்கிறார். எனவே, அவ்வொழுங்குகள் செய்யப்படும் வரை பெண்கள் உயர்கல்வியைத் தொடர இயலாது.

சாள்ஸ் ஜெ. போமன்