“ஜூலியன்வாலா பாக் படுகொலைகளுக்குப் பழிவாங்க எலிசபெத் மகாராணியைக் கொல்வேன்” – ஜஸ்வந்த் சிங் சாயெல்
நத்தார் தினத்தன்று விண்ட்சர் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த நபர் இந்தியப் பின்னணியைக் கொண்ட ஜஸ்வந்த் சிங் சாயெல் என்று தெரியவந்திருக்கிறது. கைது செய்யப்பட சுமார் 24 நிமிடங்களுக்கு முன்னர் அந்தப் 19 வயது நபர் ஸ்னப்சாட் என்ற சமூகவலைத்தளத்தில் தனது எண்ணத்தைப் பகிர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
“1919 இல் ஜூலியன்வாலா பாக்கில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்காக நான் அரச குடும்பத்தின் தலைவியான எலிசபெத் மகாராணிகைக் கொல்ல முற்படுவேன். என்னை மன்னியுங்கள், நான் செய்யப்போவதற்கான என்னை மன்னியுங்கள். நான் இந்தியாவின் சீக்கியர். அக்கொலைகளில் அவமதிக்கப்பட்டவர்கள், எங்கள் இனத்தவரை ஒடுக்கிவைத்திருந்தவர்களைப் பழிவாங்கவே இதைச் செய்கிறேன்,” என்று ஜஸ்வந்த் சிங் சாயெல் குறிப்பிட்டிருந்தான்.
கைதுசெய்யப்பட்டவன் மனோவியாதியுள்ளவனா என்று அறிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்