காதல் எட்டிப் பார்க்கிறது

நொடிக்கவிதைகள்

வேறெதுவும்
இல்லாதது போல்
உணர்வு..
நீயில்லாத
பொழுதுகள்.!

காதல் மழை
பெய்கிறது..
குறிப்பாய்
என்மீது மட்டும்.!

பனிக்காலத்
துவக்கம்..
காதல் கவிதைகளில்
கடுங்குளிர்.!

கதவு
இடுக்குகளிலிருந்து
கண்களை மறைக்கிறாய்..
காதல் எட்டிப் பார்த்தது.!

உறை பனியின்
ஜுவாலிப்பு..
உன் காதல்
நடைபாதையில்.!

எழுதுவது : ப.ஜார்ஜ்