கோலப் பாவை

கோலப் பாவையிவள்
எனைக் காண வீடு தேடி வந்து விட்டாளே!

தன்னை கோலத்தில் கொண்டு வந்த மங்கை யாரிவள் என்று கண்டுச் செல்ல வந்தாளோ!

கண்ட சந்தோஷத்தில் முத்த மழை பொழிந்து விட்டாளே!

என் கை வண்ணத்தில் தான் எத்தனை உயிர்கள் பிரசவிக்கின்றன!

அவள் ஆடையில் தான் எத்தனை வண்ணங்கள்
நம் எண்ணங்களைப் போல!

அவளைச் சுற்றி வண்ண மொட்டுக்கள் பூக்கத் துடிக்கின்றதே!

பாவை இவள்
வழி மறித்து நிற்கிறாளோ!

நீல வண்ண ரவிக்கை பூக்களுக்கும் போட்டியோ!

இரட்டை சடை வயது அனைவரையும் ஈர்ப்பதற்கு தானோ அழகு தேவதையே!

நீ பூமியில் உருவான மங்கையா!

இல்லை இல்லை
நீ என்
கை வண்ணத்தில்
உருவான அழகியாயிற்றே!

எழுதுவது :விஜயலட்சுமி