நிலவு
என் உயிரினுள் புகுந்த இன்னுமோர் உயிரே
விண்மீன்களெல்லாம் உன்னை சிறைபிடிக்க திட்டமிடவே
என் உள்ளத்தில் உதித்த உன்னை
இதயத்தில் மறைத்து வைக்க என்னுகிறேன்
என்னருகே வருவாயா….
பனிக்காற்று பரவிவர தனித்த ஒருத்தியாய்
வானவன் உள்ளங்கையில் குளிர்ப்போக்குகிறாயோ
உள்ளங்கைக்கொண்டு உன்னை களவாட என்னுவான்
உள்ளம் கொண்டு உன்னை உருக வைப்பேன்
என்னருகே வருவாயா
மறந்துபோய் மரங்கள் அருகே ஒளிந்தாயா
உன் புண்ணகை ஒளியினால் மரங்களின் மனம் கவர்கிறாய்
உன்னால் கவரப்பட்டால் எப்படி மீட்பது
உன் புண்ணகை ஒளியினை என் மீது மட்டும் பரவவிடு
என்னருகே வருவாயா
ஊரார் துயில் கொள்ளும் வேலையில்
கனவிலும் உன்னை காதலிக்கும் எனக்கு
ஒழிந்துக்கொண்டுதான் காதல் தருவாயா
நான் ஒன்றும் உன்னை களவாடும் கள்வன் அல்ல
காதலால் ஆளும் காதல் கள்வன் வேறு வழி இல்லை
என்னருகே வந்துவிடு
வழிப்போக்கன் விழிகளுக்கு அவனோடு துனையாகிறாயாம்
சோறூட்டும் அண்ணைகு நீ தோழியாம்
காதலிப்பவர்களுக்கு நீ நினைவு சின்னமாம்
உன்மீது காதலில் விழுந்த எனக்கு என் மனம் கூறுகிறது நீ என் தேவதையாம்
வேறு வழி இல்லை
என்னருகே வந்துவிடு…
எழுதுவது: பா .சுதர்ஷன்