உக்ரேனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் முக்கிய இணையத் தளங்களைத் தாக்கும் இணையத்தள இராணுவம்.

கண்ணுக்குத் தெரியாத வகையில் இணையத்தளங்களில் ஒளித்திருந்து ரஷ்யாவுடைய முக்கிய இணைய முடிப்புகளைத் தாக்கப் பெரும் இணையத்தள இராணுவமொன்று ஒன்றுபட்டிருக்கிறது. ரஷ்யாவின் டிஜிடல் அமைச்சர் மிஹாயிலோ பெடரோவின் வேண்டுகோளை ஏற்று ரஷ்யாவின் மீது இணையத்தளத்தில் போர் தொடுத்திருப்பவர்களின் என்ணிக்கை சுமார் 260,000 பேர் என்று கணிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட இணையத்தள இராணுவத்தின் தாக்குதல்கள் எந்த அளவு உக்கிரமானது, பயனளிக்கும் போன்ற விபரங்கள் தெரியவில்லை. இணையத்தளமான டெலிகிராம் மூலம் அந்த இயக்கத்தினர் குறிவைத்துத் தாக்கவேண்டிய இணைய முடிச்சுக்களைப் பட்டியலிட்டுப் பரப்பி வருகிறார்கள். அக்குழுவினரில் குறிப்பிட்ட ரஷ்யத் தளங்களின் பலவீனங்களை அறிந்தவர்கள் அவற்றைத் தமக்கிடையே பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதன் மூலம் தாக்குதல்களை நடத்தலாம் என்று “Hackers Without Borders” அமைப்பின் நிறுவனர் கிளெமண்ட் டொமிங்கோ குறிப்பிட்டிருக்கிறார்.

அதேசமயம், ஒரு நாட்டின் இணையத்தளங்களைத் தாக்கிச் செய்யும் குற்றங்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம், விளைவான சட்டப் பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்று இணையத்தள பாதுகாப்பு சம்பந்தப்பட்டவற்றில் ஈடுபட்டிருக்கும் விற்பன்னர்கள் எச்சரிக்கிறார்கள். உக்ரேன் மக்களுக்கு உதவ வேறு பல வழிகள் இருக்கின்றன என்று அவர்கள் சுட்டிக் காட்டி அறிவுறுத்துகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்