மீண்டும் ஒரு தீவிரவாதங்களாலான அலை வரலாம் என்று எச்சரிக்கிறார் இஸ்ராயேல் பிரதமர்.

செவ்வாயன்று இஸ்ராயேலின் தலைநகரில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்ற பாலஸ்தீனத் தீவிரவாதியின் தாக்குதலையும் சேர்த்து ஒரே வாரத்தில் அந்த நாடு மூன்று தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது. அதையடுத்து, பிரதமர் நப்தலி பென்னட், “இஸ்லாமியத் தீவிரவாதங்களிலான புதிய ஒரு அலையை நாடு எதிர்பார்க்கக்கூடும்,” என்று எச்சரித்திருக்கிறார்.

இஸ்ராயேலில் இருவரைச் சுட்டுக் கொன்றதாக காலிபாத் தீவிரவாதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். – வெற்றிநடை (vetrinadai.com)

தெல் அவிவ் நகரின் பழமைவாத ஓர்த்தடொக்ஸ் யூதர்கள் வாழும் பகுதிகளினூடே மோட்டார்சைக்கிளில் சென்ற ஒரு பாலஸ்தீனத் தீவிரவாதியே அக்கொலைகளைச் செய்திந்திருந்தான்.அதையடுத்து நாட்டின் பிரதமர் அவசரகால நடவடிக்கையாகக் கருதி அமைச்சரவையைக் கூட்டி நடக்கவேண்டியவை குறித்துக் கலந்தாலோசித்தார்.

அதையடுத்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளைக் கூட்டி நிலைமையைத் தெரிந்துகொண்ட பின்னர், “இஸ்ராயேல் இஸ்லாமியத் தீவிரவாதங்களின் ஒரு புதிய அலையை எதிர்நோக்கியிருக்கிறது. இதை நாம் சகிப்புத்தன்மையுடன், எமது சக்தியை ஒருமைப்படுத்தி இரும்புக்கைகளுடன் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்,” என்று பென்னட் தெரிவித்தார்.

மூன்று தாக்குதல்களிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 பேராகும். அதையடுத்து பாலஸ்தீனப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நடந்த தாக்குதல்கள் ஒரேயடியாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவையா அல்லது தனித்தனியானவையா என்பதை இஸ்ராயேல் அதிகாரிகளால் இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்ளமுடியவில்லை.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் தொடர்ந்தும் இயங்கிவரும் காலிபாத் தீவிரவாதிகள் இஸ்ராயேலில் தாக்குதல்களை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். நடந்த தாக்குதல்களை பாலஸ்தீனத் தீவிரவாதக் குழுக்கள் ஆதரித்து அறிக்கை விட்டிருக்கின்றன. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மூன்றாவது தாக்குதலுக்குப் பின்னர் அவற்றைக் கண்டித்து, “இவைபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *