கிரீஸையும், பல்கேரியாவையும் இணைக்கும் எரிவாயுக் குளாய்கள் ஜூலை மாதத்தில் தயார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் “ரஷ்ய எரிபொருள் புறக்கணிப்பு,” வெவ்வேறு நாடுகளில் புதிய கூட்டணிகளை உண்டாக்கிவருகிறது. ஜூலை முதலாம் திகதி முதல் கிரீஸும், பல்கேரியாவும் தமக்கிடையே எரிவாயுக் குளாய்களை இணைக்கின்றன. அஸார்பைஜானிலிருந்து அதன் மூலம் பல்கேரியாவுக்குக் கோடை காலத்தில் தேவையான எரிவாயு கிடைக்கும்.
ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த பல்கேரியா ரூபிள் நாணயத்தில் தனது விலையைச் செலுத்த மறுத்ததால் ரஷ்யா பல்கேரியாவுக்குத் தொடர்ந்து எரிவாயுவை விற்க மறுத்துவிட்டது. அதே காரணத்துக்காக பின்லாந்து, போலந்து, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கான எரிவாயு விற்பனையையும் ரஷ்யா நிறுத்திவிட்டது.
ஆசார்பைஜானிலிருந்து துருக்கி, கிரீஸ் மூலமாக இத்தாலி வரை குறிப்பிட்ட எரிவாயுக்குளாய் நீண்டிருக்கிறது.
பல்கேரியாவுக்கு அதைத் தவிர அமெரிக்காவிலிருந்து திரவ எரிவாயுவும் கிடைக்கவிருக்கிறது. அதன் விலையும் ரஷ்யாவின் விலையை விடக் குறைவானதே.
சாள்ஸ் ஜெ. போமன்