பட்டினி அதிகரிக்கும் அபாய அறிக்கையில் சிறிலங்காவும் இணைப்பு
எதிர்வரும் ஜுன் முதல் செப்ரெம்பர் வரையான காலத்தில் உணவுத்தேவை மற்றும் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில், பட்டினி அதிகரிக்கும் நாடுகள் வரிசையில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வை ஐ நா உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐ நா உலக உணவுச் செயற்திட்டம் ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்டிருந்தன. குறித்த இந்த அறிக்கையிலே பட்டினி அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவையும் உள்ளடக்கியுள்ளது.
இத்துடன் இணைந்து பட்டினி அபாய எச்சரிக்கை நாடுகளின் பட்டியலில் அங்கோலா, லெபனான், மடகஸ்கார், மொஸாம்பியா ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து தற்போதய நடைமுறை பொருளாதார சிக்கல் நிலைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையையும் மற்றும் உக்ரேன், மேற்கு ஆபிரிக்கா, மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளும் இந்த அபாய எச்சரிக்கைப் பட்டியலில் இணைந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எழுதுவது :திசோ