சமகாலத்தில் பேசப்படும் ஒரு விடயம்தான் பெண்ணின் மார்பகம்
சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு விடையம் நிகழ்ந்தால் மொத்த பெண்ணிணத்தை சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பொதுவாக சமூகத்தில் காணப்படும் ஆண்வர்க்தினருக்கு கவர்ச்சி பொருளாகவும் பெண்ணிடம் ஈர்க்கும் அங்கமாகும் பெண்ணின் மார்பகம் இருப்பது யாவரும் அறிந்ததே உண்மை. இது பொதுவாக ஆணின் பார்வையே தவிர அணைத்து ஆண்களின் பார்வையேன கூறமுடியாது. எனினும் பொதுவாக ஆண்கள் பெண்களிடம் ஈர்க்ககூடிய அங்கம் என்பது நிதர்சனம்..
பெண்ணின் மார்பகத்தை பல்வேறு கோணங்களில் சமூகத்தில் பார்கின்றனர் . ஆனால் யதார்த்தமான பார்வையை பொறுத்தவரை உளவியலாளர்களாக இருந்தாலும் , ஆன்மீக ரீதியாக இருந்தாலும் , வைத்தியரீதியாகவும் ஒரு சமனான கோணத்தில்தான் பார்க்கப்படுகிறது. இன்று பலருக்கு தாய்ப்பாலின் அருமை தெரியாமல் இருக்கின்றனர். இவ்வாறு பெண்ணின் மார்பகத்தை கேலி செய்பவர்கள் கொஞ்சம் சற்று சிந்தியுங்கள்.
ஏனென்றால்..
பெண்ணின் மார்பகங்கள் என்பது கவர்ச்சி பொருள் அல்ல மாறாக வளர்ச்சி பொருள்.
தாய்பால் இல்லாமல் குழந்தைகள் வளர்ச்சி குன்றிகின்றார்கள்.
சில தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கும் பாலுட்டி விட்டு தாய்ப்பாலை தாய்பால் இல்லாத தாய்மார்களுக்கு தியாகம் செய்கிறார்கள்.
குழந்தைகளுக்கு வழங்கும் பால்மாக்களை விட அதிகூடிய ஊட்டச்சத்துக்களை தாய்பால் கொடுக்கின்றது.
ஆய்வுகளின் அடிப்படையில் தாய்ப்பாலை அறிந்துகின்ற குழந்தைகள் விஷேட விருத்தி உள்ளதாக கூறுகின்றது.
தாய்பாலை அருந்தும் குழந்தைகள் தாயுடான அன்பை அதிகளவு பெறுகின்றார்கள்.
பெண்களின் மார்பகங்கள் வெறும் கேலி செய்யும் அங்கம் அல்ல . பெண்களை எவ்வளவு மதிக்கின்றோமோ அதை போல் தான் அவர்களுடைய அங்களை மதிக்க வேண்டும். இயந்திரங்களினால் செய்ய முடியாத வேலையை ஆயிரம் வலிகளையும் தாண்டி குழந்தையை பெற்றெடுக்கின்றாள்.
மங்கையை மதிப்போம்
மனிதநேயமிக்க மனிதர்களாய் வாழ்வோம்
எழுதுவது : பஹ்ரியா பாயிஸ்