மொரொக்கோவுக்கு விஜயம் செய்கிறார் இஸ்ராயேலின் இராணுவத்தின் தலைவர்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீண்டும் இஸ்ராயேலை நெருங்கிய நாடுகளில் ஒன்றான மொரொக்கோவுக்கு இஸ்ராயேலிய இராணுவத்தின் தலைவர் அவிவ் கொவாகி விஜயம் செய்திருக்கிறார். 2000 ம் ஆண்டில் இஸ்ராயேலுக்கு எதிராகப் பாலஸ்தீனர்களிடயே உண்டாகிய தேசியக் கிளர்ச்சியை ஆதரித்து இஸ்ராயேலுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்டிருந்த மொரொக்கோவுக்கு இஸ்ராயேலின் இராணுவ உயர்மட்டத் தளபதியொருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த நவம்பரில் மொரொக்கோவுக்கு விஜயம் செய்த இஸ்ராயேலிய பாதுகாப்பு அமைச்சர் தம்மிடமிருந்து மொரொக்கோ நவீன இராணுவப் போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதையடுத்து இரண்டு நாடுகளிக்கிடையேயும் மற்றும் துறையினரிடையேயும் கூட்டுறவு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இஸ்ராயேலுடன் நெருங்கி உறவாடும் மொரொக்கோவுடன் பக்கத்து நாடான அல்ஜீரியாவுக்குப் பகை அதிகரித்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்