வழிமாறிப்போய் செய்ன் நதிக்குள் நுழைந்துவிட்ட வெள்ளைத் திமிங்கலம்.
பிரான்ஸ் தலைநகரான பாரிசினூடாக ஓடும் செய்ன் நதியினுள் ஒரு வெள்ளைத் திமிங்கலம் [beluga whale] நுழைந்துவிட்டிருக்கிறது. குறிப்பிட்ட விலங்கை பாரிஸ் நகரிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் மக்கள் அவதானித்தார்கள். அதன் நடமாட்டம் தற்போது விலங்கியலாளர்களாலும், மீட்புப் படையினராலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பலவீனமாக இருக்கும் அவ்விலங்குக்குத் தொந்தரவு கொடுக்காமலிருக்குமாறு மக்கள் வேண்டப்படுகிறார்கள்.
வெள்ளைத் திமிங்கலங்களின் நடமாடும் பகுதி வட துருவத்தில் கனடா, ரஷ்யா, அலாஸ்கா பகுதிகளாகும். எனவே செய்ன் நதிப்பகுதிக்குள் அது எப்படி நுழைந்தது என்று ஆராய்ச்சியாளர்களால் விளக்க முடியவில்லை. ஆங்கிலக் கால்வாயின் ஊடாகவே அது வந்திருக்கலாமென்று கணிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் செய்ன் நதியினுள் ஒரு சுறா நுழைந்திருந்தது. அதுவும் அங்கே பொதுவாகக் காணப்படும் விலங்கல்ல. அதை வெவ்வேறு முறையில் அங்கிருந்து விரட்டிக் கடல்பகுதியில் சேர்க்க முயற்சித்தனர். சுகவீனமாக இருந்த அந்தச் சுறா இறந்துவிட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்