அமெரிக்கர்களின் வாகனங்களுக்கு மின்சாரச் சக்திகொடுக்கும் மையங்களை ஆரம்பிக்கிறது ஐக்கியா நிறுவனம்.
18 அமெரிக்க நகரங்களில் 25 ஐக்கியா நிறுவனப் பல்பொருள் அங்காடிகளில் வாகனங்களின் மின்கலங்களுக்குச் சக்திகொடுக்கும் மையங்களை ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருக்கிறது ஐக்கியா. முதலாவது கட்டத் திட்டங்களை இவ்வருட இறுதியிலேயே செயற்படுத்தவிருக்கும் ஐக்கியா மொத்தமாகச் சுமார் 200 மின்சாரச் சக்திகொடுக்கும் இயந்திரங்களைக் கட்டவிருக்கிறது.
வாஷிங்டன், நியூ யோர்க், டெக்சாஸ், கலிபோர்னியா, புளோரிடா நகரங்கள் உட்பட அமைக்கப்படவிருக்கும் இயந்திரங்களில் வெவ்வேறு வேகத்தில் மின்சாரக் கலங்களைச் சக்தியேற்றிக்கொள்ளலாம். அவைகள் ஐக்கியா நிறுவன பாரவண்டிகளையும், அங்காடிக்கு வருபவர்களின் வாகனங்களின் கலங்களையும் சக்தியேற்றப் பாவிக்கப்படும்.
வாகனங்களின் கலங்களுக்கு மின்சக்தியேற்ற அமெரிக்கா கட்டவிருக்கும் மையங்களின் இவை ஒரு பாகமே. சுமார் 1,800 வேக மின்சக்திமையங்கள் நாடெங்கும் கட்டியெழுப்பப்படவிருக்கின்றன. 2025 இல் அவைகளில் பெரும்பகுதி பாவனைக்குத் தயாராக இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்