மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது | மக்களுக்கே அது தரும் அவதி
நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் படி புதியவிலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தினமும் 1000 ரூபாவாக சம்பளம் பெறும் மலையக தோட்டத் தொழிலாளர்களும், விவசாயத்தினை மேற்கொள்ளும் மக்களும் மீனவர்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மலையக மக்களுக்கு சீரான மின்சார திட்டமின்மையால் மண்ணெண்ணையை நம்பியே தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். மண்ணெண்ணை விலை அதிகரிப்பால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மண்ணெண்ணை அதிகரிப்பின் காரணமாக உச்ச விலையில் இருக்கும. மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமற்றவர்களாக வருவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.