டேவிட் அட்டன்பரோவைப் பின்னால் தள்ளி எம்மி பரிசை வெற்றியெடுத்தார் பரக் ஒபாமா.

நிகழ்ச்சி விபரங்களை வாசிப்பவர்களுக்கான பரிசை Our Great National Parks என்ற நெட்பிளிக்ஸ் தொகுப்புக்காக வெற்றிபெற்றிருக்கிறார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா. குறிப்பிடுத்த வகைப்படுத்தலில் அவருடன் பல சர்வதேசப் பரிசுக்களைத் தனது நிகழ்ச்சிகளுக்காகப் பெற்ற செர் ரிச்சார்ட் அட்டன்பரோ, கரீம் அப்துல் ஜபார், லுபிட்டா நியோங்கோ ஆகியோரைத் தோற்கடித்திருக்கிறார்.

இதுவரை எம்மி பரிசை வெற்றிபெற்றிருக்கும் இன்னொரு அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் மட்டுமே. பரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் சேர்ந்து 2017 இல்   Higher Ground என்ற நிகழ்ச்சிகள் தயாரிக்கும்  நிறுவனத்தை ஸ்தாபித்தார். அதன் மூலம் அவர் நெட்பிளிக்ஸுக்காகத் தயாரித்ததே “எங்கள் அருமையான தேசியப் பூங்காக்கள்” நிகழ்ச்சியாகும். அது ஐந்து பாகங்களைக் கொண்டது. எம்மி பரிசு வழங்கும் விழாவுக்கு ஒபாமா நேரடியாக வரவில்லை.

பரக் ஒபாமா ஏற்கனவே கிரம்மி பரிசுகள் இரண்டைப் பெற்றிருக்கிறார். அவையும் நிகழ்ச்சிகளை வாசிப்பதற்காகவே என்பது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *