கடந்து போ|கவிநடை
மனிதர்கள்
நம்முள் விழுந்து
நம் வெறுப்பை
வெளிக் கொணர்ந்தால்
அது…
கர்மா,
அதை சலனமின்றி
கடந்து செல்வதே
கர்மவினைக்கு
நாம் கொடுக்கு
தகுதியான
விளைவு,
மனிதர்கள் நம்முள்
இருந்து
கோபத்தை
வரவழைத்தால்
அது
வினை..
புரிதலுடன்
மௌனமாக
கடந்து
செல்லுகையில்
அது,
செயலிழந்துபோகும்…
மனிதர்கள்
நம்முள் விழுந்து
காதலை
வெளிக்
கொணர்ந்தால்
அது
வலிகளுக்கான
சாபம்,
நிராகரித்து
கடந்து
செல்லுகையில்
வேதனைகள்
செயலிழந்து
போகும்,
மனிதர்கள்
நம்முள் விழுந்து
நன்றியுணர்வை
உண்டாக்கினால்
அது, நம்
புண்ணியத்தின்
விளைவு..
நன்றிகூறி
கைகுப்பி
கடந்து
செல்லுங்கால்
கடந்துபோகும்
கர்மவினை
கூட
நம்மை…..
எழுதுவது : ஜெயக்குமாரி