பாலர்களைப் பேணும் மையத்துக்குள் நுழைந்து சுமார் 30 பேரைக் கொன்றான் முன்னாள் பொலீஸ் ஒருவன்.
தாய்லாந்தின் வடகிழக்குப் பிராந்தியத்தில் லாவோஸின் எல்லையை அடுத்துள்ள நகரொன்றிலிருக்கும் ஆரம்பப்பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த ஒருவன் அங்கே சுமார் 30 பேரைக் கொலை செய்திருக்கிறான். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாகும். கொலைக்காகத் துப்பாக்கியும், கத்தியும் பாவிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மற்றவர்களைக் கொன்ற பின் அவன் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
அப்பகுதியில் பொலீசாக இருந்த கொலைகாரன் பல லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டதுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிட்டதால் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறான். சுமார் 2 – 3 வயதான பிள்ளைகள் இருக்கும் அந்த பாடசாலைக்குள் வந்த பன்யா கம்ராப் என்ற கொலைகாரன் அவர்களில் சுமார் 23 பேரைக் கொன்றிருக்கிறான். பாலர்களை பேணுபவர்கள் இருவர், தாக்குதலை அறிந்து அங்கே வந்த ஊரவர்கள், பொலீசார் இருவர் உட்பட மொத்தமாகச் சுமார் 34 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்