ரஷ்யர் ஒருவர் உட்பட நான்கு பேர் அமெரிக்காவால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.

மேற்கு நாடுகளுடனான தனது அரசியல் முரண்பாடுகளினால் ரஷ்யா அவர்களுடனான தனது விண்வெளி ஆராய்ச்சிகளையும் வெட்டிக்கொண்டது. அதன் பின்னரும் ரஷ்ய விண்வெளி வீராங்கனையான அன்னா கிக்கினா தனது சகாக்களுடன் ஒரு நாள் விண்வெளிப் பயணத்தில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குப் பயணித்திருக்கிறார்.

38 வயதான அன்னா கிக்கினாவுடன், நிக்கோல் மன், ஜோஷ் கசாடா ஆகிய அமெரிக்கர்களும், ஜப்பானியரான கொய்ச்சாய் வக்காட்டாவும் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பறந்த விண்வெளிக்கலத்தினுள் பயணிக்கிறார்கள். அவர்களில் ஜப்பானிய வீரர் மட்டுமே ஏற்கனவே விண்வெளிப் பயணம் செய்தவர்களாகும். தான் கடைசி நிமிடத்திலேயே குறிப்பிட்ட பயணத்துக்காகத் தொடர்புகொள்ளப்பட்டதாக அன்னா கிக்கினா குறிப்பிடுகிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *