பாகு நிலையிலிருக்கும் மருந்துகலைப் பாவனைக்குத் தற்காலிகமாக தடுத்து உத்தரவிட்டிருக்கிறது இந்தோனேசியா.
நாட்டில் விற்கப்படும் பாகு (syrup) நிலையிருக்கும் மருந்துகள் சிலவற்றினால் பாதிக்கப்பட்டுக் குழந்தைகள் இறந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தோனேசியா அப்படிப்பட்ட மருந்துகளை நாட்டில் விற்பனை, பாவனைக்குத் தடுத்து உத்தரவிட்டிருக்கிறது. அந்தப் பாகுவில் பாவிக்கப்பட்டிருக்கும் கலவை குழந்தைகளுக்கு திடீர் சிறு நீரகப் பிரச்சினைகளை உண்டாக்கி மரணமடைய வைத்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வருடத்தில் இந்தோனேசியக் குறந்தைகள் 99 பேர் இதே போன்று இறந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட மருந்துக் கலவைகளிலிருக்கும் கிளிகோலே (ethylene glycol, diethylene glycol) அந்தச் சிறுநீரகக் காயப்படுத்தலுக்குக் காரணம் என்பதால் ஜூரம், சளி, இருமல் போன்றவைக்கான பாகு மருந்துகளை இந்தோனேசிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் மைடன் பார்மசூட்டிக்கல்ஸ் (Maiden Pharmaceuticals) நிறுவனம் தயாரித்த அதே போன்ற மருந்துகளால் கம்பியாவில் சுமார் 70 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதையடுத்து கம்பியா குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளைத் தடை செய்திருக்கிறது. அம்மருந்துகள் கம்பியாவுக்கு மட்டுமன்றி வேறு நாடுகளுக்கும் அனுமதியின்றி விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்