பாலர்களுக்கான வீதி உதைபந்தாட்டப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதி கத்தாரின் பரந்த மனது போற்றப்பட்டது.
மேலும் நான்கு வாரங்களின் பின்னர் சர்வதேசக் கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்தவிருக்கிறது கத்தார். அதற்கு முன்பாக “பாலர்களுக்கான வீதி உதைபந்தாட்டக் கோப்பை” மோதல்களைக் கத்தார் நடத்தியது. அதற்கான உதவிகளைக் கத்தார் பரந்த மனதுடன் உதவி அப்போட்டிகளைக் கோலாகலமாக நடத்தியதற்கு Street Child United அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான ஜோன் ரோ நன்றி தெரிவித்தார்.
சூடான், புருண்டி, இந்தியா, பிரேசில், பாலஸ்தீனா முதல் வட, தென் அமெரிக்காவைச் சேர்ந்த பாலர்களும் அதற்காக நடந்த நான்கு மோதல்களில் பங்குபற்றியிருந்தார்கள். மொத்தமாக சிறுவர்களைக் கொண்ட 15 குழுக்களும், சிறுமிகளைக் கொண்ட 13 குழுக்களும் அவற்றிலிருந்தன. வெவ்வேறு காரணங்களுக்காக அகதிகளான பாலர்களை அவற்றில் 10 குழுக்கள் கொண்டிருந்தன.
“நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள், இந்தப் போட்டிகளை நடத்துவது எளிதாக இருந்தது. கத்தாரில் வாழும் மக்கள் நல்ல இதயங்களைக் கொண்டுள்ளனர், எங்களுக்கு நிறைய உதவி தேவை என்பதை அவர்கள் அறிந்து தாராளமான மனதுடன் உதவிகளை நல்கினார்கள்,” என்று தெரிவித்தார் ஜோன் ரோ.
வீதிகளில் உதைபந்தாட்டப் போட்டிகளுக்குபோட்டிக்கு முன்னதாக நடந்த , மக்கள் ஆரோக்கியத்திற்கான உலக கண்டுபிடிப்பு உச்சி மாநாடு நடத்தப்பட்டது (WISH) 202., அங்கே உலகெங்கிலும் வீதிகளில் வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளின் உடல்நலக் கவலைகள் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அவர்களின் வாழ்க்கை நிலை காரணமாக அவர்களின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய முட்டுக்கட்டைகள் பற்றி அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஐ.நா-வின் விபரங்களின்படி உலகெங்கும் வீதிகளில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 100 மில்லியன் ஆகும். அவர்கள் எவ்வித அடையாளங்கள், உரிமைகள், அடிப்படை வசதிகளுமின்றி வாழ்கிறார்கள். கல்வி, சுகாதார சேவை போன்றவை அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
2022 க்கான பாலர்களுக்கான வீதி உதைபந்தாட்டப் போட்டியின் சிறுமிகளுக்கான வெற்றிக்கோப்பையை பிரேசில் அணியும், சிறுவர்களுக்கான வெற்றிக்கோப்பையை எகிப்து அணியும் வென்றெடுத்தன.
சாள்ஸ் ஜெ. போமன்