நியூசிலாந்திடம் தோற்றது இலங்கை|புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் நியூசிலாந்து
T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் நியூசிலாந்திடம் 65 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.அதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5ம் இடத்திற்கு இலங்கை பின்தள்ளப்பட நியூசிலாந்து தொடர்ந்து முன்னிலை பெறுகிறது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைக்குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்தில் மளமள என்று விக்கெட்டுக்களை இழந்து 19.2 ஓவர்களில் 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தோல்வியுற்ற இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கடினமாக்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக 64 பந்துகளில் மிக விரைவாக 104 ஓட்டங்களைக்குவித்த Glen Phillips அறிவிக்கப்பட்டார்.
இந்தவெற்றியின் மூலம் குழு ஒன்றின் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி தன்னை நிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.