ஐந்து ஓட்டங்களால் வென்ற இந்தியா| போராடி தோற்ற பங்களாதேஷ்| T20 உலகக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டியொன்றின் இன்றைய போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை டக்வேர்த் லூயிஸ் அடிப்படையில் 5 ஓட்டங்களால் நூலிழையில் வெற்றிபெற்றது.
நிறைவுவரை விறுவிறுப்பாக வெற்றிக்காக போராடி தோற்றது பங்களாதேஷ் அணி.
முன்னதாக நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களைக்குவித்தது. துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லி 44 பந்துகளில் ஆட்டமிழக்காது குவித்த 64 ஓட்டங்களும் கேஎல் ராகுல் 32 பந்துகளில் குவித்த 50 ஓட்டங்களும் ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கைகள் ஆகும்.
போட்டியின் நடுவே மழைவந்து குறுக்கிட, பங்களாதேஷ் அணிக்கு அணிக்கு டக்வேர்த்லூயிஸ் அடிப்படையில் 16 ஓவர்களில் 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொடுக்கப்பட்டது.
பங்களாதேஷ் அணியும் 16 ஓவர்கள் வரை நின்று நிலைத்தாடி 6விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களைக்குவித்தது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் லிற்றன் டாஸ் வெறும் 25 பந்துகளில் குவித்த 60 ஓட்டங்களும் நுறுல் ஹஸன் 14 பந்துகளில் ஆட்டமிழக்காது குவித்த 25 ஓட்டங்கள் போட்டியை மிக விறுவிறுப்பாக நகர்த்தியது.
நிறைவில் ஐந்து ஓட்டங்களால் போராடி இந்திய அணியிடம் பங்களாதேஷ் அணி தோற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டார்.
இன்றைய வெற்றியைத்தொடர்ந்து இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் நிலையை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.