இங்கிலாந்தின் அபார வெற்றி|
அரையிறுதியில் தோற்றது இந்தியா | t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து  அணி  அபார வெற்றிபெற்றிருக்கிறது.
சளைக்காது போராடி அரையிறுதி வரை வந்த இந்தியா துரதிஸ்டமாக படுதோல்வியுடன் அரையிறுதிப்போட்டியுடன் வெளியேறியது.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற  இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தயாரானது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில்  6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 168 ஓட்டங்களைக் குவித்தது.


இந்திய அணியில் Hardik Pandya வெறும் 33 பந்துகளில் 63  ஓட்டங்களைக் குவித்தார். அவரோடு முன்னாள் அணித்தலைவர் Virat Kohli எடுத்த 40 பந்துகளில் 50  ஓட்டங்களும் இந்திய  சார்பில் எடுத்த ஆகக்கூடிய ஓட்டங்கள்.

பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து  ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் நின்று நிலைத்தாடிய அபார ஆட்டத்தால் எந்த வித விக்கெட்டுக்களையும் இழக்காமல்   170 ஓட்ங்களைக்குவித்து  16வது ஓவரிலேயே வெற்றி பெற்றது.

அதன்படி இந்திய அணியை 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் இங்கிலாந்து அணி சென்றது.


இங்கிலாந்து  அணியின் சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான  Alex hales  47 பந்துகளில் குவித்த  86 ஓட்டங்களும் அணித்தலைவர் Jos Butler 49 பந்துகளில் எடுத்த 80 ஓட்டங்களும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் Alex Hales அறிவிக்கப்பட்டார்

இதன்படி  இங்கிலாந்து  அணி பாகிஸ்தான் அணியுடன் வரும் ஞாயிறன்று இறுதிப்போட்டியில் மெல்போனில் மோதவுள்ளது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே ஒருதடவை t20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது எனினும் அன்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் தோற்றிருந்தது.


இருப்பினும்  50 ஓவர்கள் உலகக்கிண்ண நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து T20 உலகக்கிண்ணத்தையும் தம்வசப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *