விரைவில் பயணிகள் தமது பயணப்பொதிகளில் திரவங்கள், எலெக்ரோனிக் பொருட்களை வைத்திருக்கலாம்.
விமான நிலையங்களினூடாகப் பயணம் செய்பவர்கள் அங்கே இருக்கும் பாதுகாப்புக் கண்காணிப்பு மையத்தைக் கடக்கும்போது தம்மிடமிருக்கும் திரவங்கள், எலெக்ரோனிக் பொருட்களைத் தனியாகக் காட்டவேண்டும். அந்தத் தேவையை ஒழித்துக்கட்டும் புதிய கண்காணிப்பு முறையை ஐக்கிய ராச்சியம் 2024 இல் அறிமுகம் செய்யவிருக்கிறது.
தீவிரவாதிகள் பயம் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமானது விமான நிலையங்களில் பயணிகள் காத்து நிறுகும் நேரத்தைக் கணிசமாக உயர்த்தியிருப்பதுடன், பல சிக்கல்களையும் கொடுத்து வருகிறது. பயணப்பொதிக்கும் 100 மில்லி லிட்டர் திரவப் பொருளையே ஒருவர் வைத்திருக்கலாம் என்ற கட்டுப்பாடு தொடரும்.
2020 லேயே பிரிட்டிஷ் விமான நிலையங்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி விமான நிலையங்களின் கண்காணிப்புப் பிராந்தியத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கத் திட்டமிட்டிருந்தது. கொவிட் 19 தொற்றுக்கள் காரணமாக ஏற்பட்ட இடைஞ்சல்களால் அது இரண்டு வருடங்கள் தாமதமாகியிருக்கிறது.
அமெரிக்காவின் சில விமான நிலையங்களும், நெதர்லாந்தின் ஷிபோல், பின்லாந்தின் ஹெல்சிங்கி விமான நிலையங்களும் பயணப்பெட்டிக்குள் இருப்பவையின் மூப்பரிமாணப் படங்களைக் கவனிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்