தமது பணியிலிருக்கும்போது இவ்வாண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை 67 ஆகும்.
67 ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் போன்ற ஊடகப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்வாண்டில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு[ IFJ] தெரிவித்துள்ளது.வ் 2021 இல் அந்த எண்ணிக்கை 47 ஆக இருந்தது என்றும் அவ்வமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன..
உக்ரேனில் போர் ஆரம்பித்த ஆரம்ப வாரங்களில் அங்கே அகப்பட்ட 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் வேறு எந்த நாட்டையும் விட அதிகளவில் அங்கேயே இறப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன.
மெக்ஸிகோ மற்றும் ஹைட்டியில், குழுக்களாக இயங்கும் அமைப்புகளினால் நடாத்தப்படும் குற்றங்கள் மற்றும் கலவரங்கள் அதிகரித்திருப்பதால் முன்பை விட அதிகமான பத்திரிகையாளர்களின் மரணத்திற்கு வழிவகுத்திருக்கிறது. தற்போது 375 ஊடகவியலாளர்கள் தமது பணியின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஹாங்காங், மியான்மார், துருக்கி, சீனாவில் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்
சாள்ஸ் ஜெ. போமன்