ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையின் நோக்கங்களை அடைந்தே தீரும் என்று புத்தின் உறுதி கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புத்தின் டிசம்பர் 21 ம் திகதி புதன்கிழமை, தனது வருடாந்திர உரையை வழங்கினார். தனது உரையின்போது அவர் ரஷ்யா நடத்திவரும் “இராணுவ நடவடிக்கைகளின் குறிக்கோளை அடைந்தே தீரும்,” என்று உறுதிதியாகக் கூறினார். மொஸ்கோவின் இராணுவத் தலைமை அலுவலகத்தில் அந்த உரையை அவர் வழங்கியபோது போரில் பங்குபற்றிவரும் இராணுவத்தினரைப் போற்றிப் பாராட்டினார்.
“நாட்டின் ஆயுதப்படையினர் கேட்பவை அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படும். இராணுவ உபகரணங்கள், போர்த்தளபாடங்கள் எவைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படப் போவதில்லை. அவைகளை வழங்குவதற்கான நிதிக்கட்டுப்பாடுகளும் இல்லை, போர்க்களத்தில் பல இறப்பது வேதனையானது, ஆனால் அதன் காரணம் மற்றைய நாடுகளின் நடத்தைகளே அன்றி, ரஷ்ய அரசின் நடவடிக்கைகள் அல்ல,” என்று அவர் வரவிருக்கும் ஆண்டுக்கான நிலைமை பற்றிக் குறிப்பிட்டார்.
ஆயுதங்கள் பற்றிக் குறிப்பிடும்போது காற்றாடி விமானங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் சாத்தான் II எனப்படும் ஒரு சிறப்பு காற்றாடி விமானம், எதிர்காலத்தில் பயன்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்தார். ரஷ்ய கடற்படையும் விரைவில் புதிய காற்றாடி விமானங்களைப் பெறும் என்றும் ஜனவரி தொடக்கத்தில், அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலில் உலகில் எவரிடமுமில்லாத போர்த்தொழில் நுட்பங்கள் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது நடவடிக்கைகளின்போது தொடர்ந்தும் தான் ரஷ்ய மக்களுடன் திறந்த மனதுடன் கருத்துக்களை ஏற்பேனென்றும், தாக்குதல் நடவடிக்கைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கிஞ்சித்தும் பாதிக்காது என்றும் கூறிய புத்தின் நாட்டோ அமைப்பு ரஷ்யாவுக்கெதிராகத் தனது முழுப் பலத்தையும் பிரயோகித்து வருவதாகவும் கூறினார்.
உக்ரேன் மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் தமது சகோதர, சகோதரிகளே என்றும் புத்தின் சாதித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்