இறக்குமதி வரி குறைக்கப்படும் சாத்தியம்..!
பல பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் அண்மைக்காலமாக நீக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (12) தெரிவித்துள்ளார்.
எனினும் ,தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இறக்குமதி தளர்வுகள் குறித்த முழுமையான விபரங்கள் மற்றும் எப்போது நீக்கப்படும் போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பொருத்து இருந்து பார்ப்போம் .வரி நீக்கப்பட்டால் பொருட்களின் விலையும் குறைவதற்கான அதிக வாய்ப்புகளும் இருக்கின்றமை குறிப்பிடதக்கது.