‘பஸ்’ ஐ சிறைப்பிடத்த மக்கள்..!
பல இடங்களில் பஸ் நிறுத்தம் இருந்தாலும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வதில்லை.இப்படி ஏற்றி செல்லாத பஸ்சை மக்கள் சிறைபிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
திருவள்ளுர் திருத்தணி முருகூர் என்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மக்கள் ,பாடசாலை மாணவர்கள்,தொழிலுக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பஸ் நிறுத்தாமல் செவதால் உரிய நேரத்திற்கு தமது கடமைகளை செய்ய முடியாது கஷ்டத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில் தான் நேற்று காலை வந்த அந்த பஸ்சை பிடித்து சிறைப்படுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் மிக நீண்ட நேரம் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.
இதன் போது போக்குவரத்து பணிமனையின் மேலாளர் அரிபாபு மற்றும் பொலிஸார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடாத்தி இனி மேல் பஸ் நிறுத்துமிடத்தில் பயணிகளை ஏற்றிக்கொள்ளும் என்று உருதியளித்தனர்.
இதன் பிறகு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கலைந்து சென்றனர்.